இந்தியா

1.உத்திர பிரதேச முதல்வர் கைலாயம் & மானசரோவருக்கு யாத்திரை செல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.தற்போது ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
2.எல்லை பாதுகாப்பு படையின் ( BSF) முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்ற தனுஶ்ரீ பாரீக் , தற்போது BSFன் தாக்குதல் படை பிரிவின் முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.இவர் ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரைச் சேர்ந்த ஆவார்.
3.மத்தியப் பிரதேசத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் ஓடும் பேருந்தில் கொடுரமாக கொல்லப்பட்ட ,கேரளாவை பூர்வீகமாக கொண்ட கன்னியாஸ்திரி “ராணி மரியாவுக்கு” அருளாளர் பட்டம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் பரிந்துரை செய்து கையெழுத்திட்டுள்ளார்.


விளையாட்டு

1.இந்திய டெஸ்ட் அணியில் 288-வது வீரராக நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அறிமுகமானார்.இவர் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.மேலும் சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
2.துபாயில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் இந்தியா 5 தங்கம் உள்ளிட்ட 13 பதக்கங்களை கைப்பறியுள்ளது.இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் , குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.மகளிர்க்கான சக்கர நாற்காலி குண்டு எறிதலில் இந்தியாவின் கரம்ஜோதி  தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நாள் 26 மார்ச் 1953.
2.ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 26 மார்ச் 1934.
3.ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவிய நாள் 26 மார்ச் 1958.
4.முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற நாள் 26 மார்ச் 2006.
5.இன்று வங்காளதேசம் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 26 மார்ச் 1971.

 

– தென்னகம்.காம் செய்தி குழு