இந்தியா

1.சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.இதில் உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1.25 சதவீதம் வட்டிக்கும்,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கத்தை 1.75 சதவீத வட்டிக்கும்,970 கிலோ தங்கத்தை, மத்திய அரசின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்துக்கு 1.25 சதவீத வட்டிக்கு பாரத ஸ்டேட் வங்கியிலும் திருப்பதி தேவஸ்தானம்  முதலீடு செய்துள்ளது.


உலகம்

1.உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப்பில் தற்போது  “ஸ்டேட்டஸ்” என்னும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.புனேவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஓகீஃப் தேர்வு செய்யப்பட்டார்.


இன்றைய தினம்

1.நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள் 26 பிப்ரவரி 1993.
2.இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்ட நாள் 26 பிப்ரவரி 1848.

 

– தென்னகம்.காம் செய்தி குழு