current_affairs

தமிழகம்

1.மொரிஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிபி அமீனா குரிப் பக்கீம், M.S.சுவாமிநாதன் அறக்கட்டளையின் சார்பில், வேதாரண்யத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உப்பு நீர் தாவர உற்பத்தி பண்ணையை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இந்தியா

1.கோவாவில் நடைபெற்ற 47வது சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு 70 Saal Azadi – Zara Yaad Karo Kurbani ( 70 ஆண்டுகள் சுதந்திரம் — தியாகங்களை நினைவு கூறுவோம் ) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட Multimedia கண்காட்சியை செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.
2.பிரதமர் அலுவலம் சார்பில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிகழ்வில் பொது மக்களின் கருத்தை அறிய NM என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3.மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் Harmony Foundation வழங்கும் அன்னை தெரேசா நினைவு சமூக நீதிக்கான சர்வதேச விருது டாக்கா காபி ஷாப் குண்டு வெடிப்பில் பலியான Faraaz Ayaaz Hossain மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Sheikh Abdullah bin Zayed bin Sultan Al Nahyan ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
4.திருப்பதி திருமலை கோயிலுக்கு நடைபாதை வழியாக நடந்தே செல்லும் பக்தர்களுக்கு,வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றிற்கு தேவஸ்தானம் இனி ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.
5.மத்திய நிதியமைச்சகம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை சிறு சேமிப்புத் திட்ட கணக்குகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.
6.நாசிக்கில் இருந்து புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு  கொன்டுவரப்பட்டது.

உலகம்

1.ஜெர்மனியைச் சேர்ந்த Green Watch என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் , 58 நாடுகள் மேற்கொண்ட பருவநிலை மாற்ற நடவடிக்கைகளின் படி அவைகளை பட்டியலிட்டுள்ளது.இதில் முதல் 3 இடங்கள் காலியாக உள்ளன.இந்தியா இந்த பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது.  பிரான்ஸ்  4வது இடத்திலும் , சுவிடன் 5வது இடத்திலும், பிரிட்டன் 6வது இடத்திலும் உள்ளன.
2.உலகிலேயே 100 சதவீதம் பணமில்லா நாடாக ஸ்வீடன் மாறி வருகிறது.அந்நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்த்தனைகள் இணையதளம் மூலமாகவும், செல்போன் ஆப்கள் மூலமாகவும் தான் நடந்து வருகின்றன .
3.ஐ.நா.வுக்கான புதிய அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டதற்கு கட்சி பேதமின்றி இந்திய வம்சாவளியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
4.இங்கிலாந்து வெளிவுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

விளையாட்டு

1.இந்தியாவின் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் டிசம்பர் 8 முதல் 18 வரை நடைபெறுகிறது.இந்த தொடருக்கு  இந்திய அணியின் கேப்டனாக ஹர்ஜீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் (World Anti-Obesity Day).
கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 2.6 மில்லியன் மக்கள் உளகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிய நாள் 26 நவம்பர் 1949.
3.பிரான்சிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக லெபனான் அறிவித்த நாள் 26 நவம்பர் 1941.
4.இன்று மும்பை தாக்குதல் நினைவு தினம்.தாக்குதல் நடத்தப்பட்ட நாள் 26 நவம்பர் 2008.