இந்தியா

1.முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் .
2.உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வசதியாக இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனி பஸ்களை இயக்க முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில் , ஊரக சாலைகளை பராமரிப்பு செய்வதற்கு தேவையான தரவுகளை உருவாக்க Aarambh என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4.மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹர்மான் பிரித் கவுருக்கு, ரூபாய் 5 லட்சம் பரிசு மற்றும் பஞ்சாப் காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.ஹர்மான்பிரித் கவுர் தற்போது மும்பையில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து பால்டிக் கடலில் ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை Joint Sea – 2017 என்ற போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
2.இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து கடலில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது தண்ணீரில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.பஹாமஸில் நடைபெற்று வந்த காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டி , குத்துச்சண்டை 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் தங்கப் பதக்கத்தை கைப்பறியுள்ளார்.மகளிர் பிரிவில் 60 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜானி வெள்ளிப் பதக்கத்தை கைப்பறியுள்ளார்.


இன்றைய தினம்

1.1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
2.1971 – அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு