இந்தியா

1.மேற்கு வங்காள மாநில அரசுக்கு இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ’பொதுச் சேவை விருது’-க்கு தேர்வாகியுள்ளது.’கன்னியாஸ்ரீ பிரகல்பா’ என்ற நலத்திடத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
2.ஜனவரி 2017-ல் பெங்களூருவில் நடைபெற்ற 14வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய அறிவியல் அமைச்சகம் VAJRA (Visiting Advanced Joint Research) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களை பங்குபெற செய்வது இதன் நோக்கமாகும்.
3.பிரீமியம் வகை ரயில்கள் எனப்படும் ராஜதானி மற்றும் சதாப்தி வகை ரயில்களில், பயணிகளின் பல்வேறு வகையிலான குறைகளை போக்க ரயில்வே நிர்வாகம் Operation Swarn (Gold) என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த் , ஒலிம்பிக் சாம்பியன் Chen Long ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
2.மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டியில் அரைசதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் படைத்துள்ளார்.மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் (47) அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினம் (International Day Against Drug abuse and Illicit Trafficking).
போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்கள்தான். இதனால் ஊழல், வன்முறை, குற்றங்கள், பாலியல் நோய்கள், எய்ட்ஸ், உடல் நலக்கோளாறு, மனநல நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனிதசமூகத்திற்கு பின்னடைவும், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இத்தினம் 1988ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
2.இன்று சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம் (International Day Support of Victims of Turture).
சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா. சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது. சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர்க் கைதிகள்வரை தொடர்கிறது. 1997ஆம் ஆண்டில் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.
3.1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு