தமிழகம்

1.68-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் வித்யாசகர் ராவ், மகாராஷ்டிரா மாநில குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றினார்.இதனால் தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதன் மூலம் நாட்டிலேயே குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


இந்தியா

1.இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களின் உடல்நலம் குறித்த விவரங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் “இ ஹெல்த்” திட்டம் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2.பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாகவும் , சிறப்பான வகையிலும் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் Saksham – 2017 (Sanrakshan Kshamta Mahotsav) பெட்ரோலிய துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
3.ரியோ ஒலிம்பிக்கில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இந்திய வீராங்கனைகள் P.V. சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் ஆகியோரை கவுரவிக்கும் பொருட்டு இந்திய அஞ்சல்துறை Golden Girls Of India – Pride Of Nation என்ற பெயரில் அஞ்சல் உறை வெளியிட்டுள்ளது.
4.மணிலாவில் நடந்து வரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் இறுதி சுற்று வருகிற ஜனவரி 30ந் தேதி நடக்கிறது.இதில்  நடுவராக பணியாற்ற 1994ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஸ்மிதாசென் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வணிகம்

1.டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா எலக்ஸி ( Tata Elxsi ) சார்பில் உருவாக்கப்படும் டிரைவர் இல்லாத காரை பெங்களூரு சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.


உலகம்

1.பிரிட்டனில் பயன்பாட்டில் இருக்கும் 1.3 பில்லியன் பவுண்ட்களில் 43.3 கோடி அளவுக்கு “1 பவுண்ட்” நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.தற்போது இந்த நாணயங்களுக்கு பதிலாக புதிய 1 பவுண்ட் நாணயங்கள் வெளியிடப்படுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரை  பழைய நாணயங்களை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை  பிரட்டன் அரசு வழங்கியுள்ளது.
2.மார்ச் 31 முதல் மே 30வரை லண்டனில் உள்ள சாட்சி கேலரியில் (Saatchi gallery) செல்ஃபிகளுக்கென்றே ஒரு கண்காட்சி  நடத்தப்பட உள்ளது.
3.சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு மாநாட்டில் உலக அளவில் மிகவேகமான வளர்ச்சி அடையும் நகரமாக பெங்களுரூ அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பட்டியலில்  ஹோசிமின் நகரம் இரண்டாவது இடத்தையும்,சிலிகான் பள்ளத்தாக்கு மூன்றாவது இடத்தையும்,ஷாங்காய் நான்காவது  இடத்தையும்,ஹைதராபாத் ஐந்தாவது  இடத்தையும் பிடித்துள்ளன.
4.2016-ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று நாசா மற்றும் NOAA அமைப்புகள் தெரிவித்துள்ளன.2016-ம் ஆண்டு நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் நிலவிய சராசரி வெப்பநிலை அளவு 58.69 டகிரி ஃபார்ன்ஹீட் ஆகும். இது 20-ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்ப அளவை விட 1.69 டிகிரி அதிகமாகும்.
5.ஜப்பானை சேர்ந்த தொஹோகு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 1200 கிலோமீட்டர் விட்ட அளவு கொண்ட பூமியின் உள்வட்டப் பகுதியில் இரும்பு ( 85%) , நிக்கலுக்கு (10%) அடுத்து 5% அளவுக்கு சிலிக்கான் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
6.துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற புர்ஜ் கலிபா நேற்று இந்திய குடியரசு தின விழாவை கௌரவிக்கும் வகையில் மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்தது.


சிறப்பு செய்திகள்

பத்ம விருதுகள் – 2017

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பத்ம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது பெற்றவர்களின் விபரம்

பத்ம விபூஷண்:

கே.ஜே.யேசுதாஸ் – இசை – கேரளா
சத்குரு ஜக்கி வாசுதேவ் – ஆன்மிகம் – தமிழகம்
சரத் பவார் – பொது வாழ்க்கை – மகாராஷ்டிரம்
முரளி மனோகர் ஜோஷி – பொது வாழ்க்கை – உத்தரப் பிரதேசம்
உடுப்பி ராமச்சந்திர ராவ் – அறிவியல் / பொறியியல் – கர்நாடகம்
சுந்தர் லால் பாட்வா (மறைவு)- பொது வாழ்க்கை – மத்தியப் பிரதேசம்
பி.ஏ.சங்மா (மறைவு) – பொது வாழ்க்கை – மேகாலயா

பத்ம பூஷன்:

விஷ்வா மோகன் பட் – கலை / இசை – ராஜஸ்தான்
பேராசிரியர் தேவி பிரசாத் திவிவேதி – இலக்கியம் / கல்வி – உத்தரப் பிரதேசம்
தெஹாம்தன் உத்வாடியா – மருத்துவம் – மகாராஷ்டிரா
ரத்னா சுந்தர் மகராஜ் – ஆன்மிகம் – குஜராத்
நிரஞ்சனா நந்தா சரஸ்வதி – யோகா – பிஹார்
ஹெச்.ஆர்.ஹெச். பிரின்சஸ் மஹா சக்ரி ஸ்ரீநிதோன் (வெளிநாடு) – இலக்கியம் / கல்வி – தாய்லாந்து
‘சோ’ ராமசாமி (மறைவு) – கல்வி / இலக்கியம் / இதழியல் – தமிழகம்

பத்மஸ்ரீ:

வசந்தி பிஷ்த் – கலை / இசை – உத்ராகண்ட்
செம்மஞ்சேரி குஞ்சிராமன் நாயர் – கலை / நடனம் – கேரளா
அருணா மஹோந்தி – கலை / நடனம் – ஒடிசா
பாரதி விஷ்ணுவர்தன் – கலை / சினிமா – கர்நாடகா
சாது மெஹர் – கலை / சினிமா – ஒடிசா
டி.கே.மூர்த்தி – கலை / இசை – #தமிழகம்
லைஷ்ராம் வீரேந்திரகுமார் சிங் – கலை / இசை – மணிப்பூர்
கிருஷ்ண ராம் சவுத்ரி – கலை / இசை – உத்தரப் பிரதேசம்
போவா தேவி – கலை / ஓவியம் – பிஹார்
திலக் கீதாய் – கலை / ஓவியம் – ராஜஸ்தான்
அக்கே யாத்கிரி ராவ் – கலை / சிற்பம் – தெலங்கானா
ஜிதேந்திர ஹரிபால் – கலை / இசை – ஒடிசா
கைஷால் கேர் – கலை / இசை – மகாராஷ்டிரம்
பரஸல்லா பி பொன்னம்மாள் – கலை / இசை – கேரளா
சுக்ரி பொம்மகவுடா – கலை / இசை – கர்நாடகா
முகுந்த் நாயக் – கலை / இசை – ஜார்கண்ட்
புருஷோத்தமன் உபாத்யாயே – கலை / இசை – குஜராத்
அனுராதா பாத்வால் – கலை / இசை – மகாராஷ்டிரா
வாரெப்பா நபா நில் – பொது சேவை – தெலங்கானா
டி.கே.விஸ்வநாதன் – பொது சேவை – ஹரியானா
கன்வால் சிபல் – பொது சேவை – டெல்லி
பிர்கா பதாதூர் லிம்பூ முரிங்லா – இலக்கியம் / கல்வி – சிக்கிம்
ஏலி அகமது – இலக்கியம் / கல்வி – அஸ்ஸாம்
நரேந்திர கோலி – இலக்கியம் / கல்வி – டெல்லி
ஜி.வெங்கட சுப்பையா – இலக்கியம் / கல்வி – கர்நாடகா
அக்கிதம் அச்சுதன் நம்பூதரி – இலக்கியம் / கல்வி – கேரளா
காசிநாத் பண்டிதா – இலக்கியம் / கல்வி – ஜம்மு காஷ்மீர்
சாமு கிருஷ்ண சாஸ்திரி – இலக்கியம் / கல்வி – டெல்லி
ஹரிஹர் க்ரிபாலு திரிபாதி – இலக்கியம் / கல்வி – உத்தரப் பிரதேசம்
மைக்கேல் டனினோ – இலக்கியம் / கல்வி – தமிழகம்
பூனம் சூரி – இலக்கியம் / கல்வி – டெல்லி
வி.ஜி. படேல் – இலக்கியம் / கல்வி – குஜராத்
கோடேஸ்வரம்மா – இலக்கியம் / கல்வி – ஆந்திரா
பல்பீர் தத் – இலக்கியம் / கல்வி / இதழியல் – ஜார்கண்ட்
பாவனா சோமையா – இலக்கியம் / கல்வி / இதழியல் – மகாராஷ்டிரா
விஷ்ணு பாண்டியா – இலக்கியம் / கல்வி / இதழியல் – குஜராத்
சுப்ரதோ தாஸ் – மருத்துவம் – குஜராத்
பக்தி யாதவ் – மருத்துவம் – மத்தியப் பிரதேசம்
முகமது அப்துல் வஹீத் – மருத்துவம் – தெலங்கானா
மதன் மாதவ் கோத்போலே – மருத்துவம் – உத்தரப் பிரதேசம்
தேவேந்திர தயாபாய் படேல் – மருத்துவம் – குஜராத்
ஹரிகிருஷ்ணன் சிங் – மருத்துவம் – சண்டிகர்
முகுந்த் மின்ஸ் – மருத்துவம் – சண்டிகர்
அருண் குமார் சர்மா – தொல்லியல் – சண்டிகர்
சஞ்சீவ் கபூர் – சமையல் நிபுணர் – மகாராஷ்டிரா
மீனாட்சி அம்மா – களரி – கேரளா
ஜெனாபாய் தர்காபாய் படேல் – வேளாண்மை – குஜராத்
சந்திரகாந்த் பிதாவா – அறிவியல் / பொறியியல் – தெலங்கானா
அஜோய் குமார் ராய் – அறிவியல் / பொறியியல் – மேற்கு வங்கம்
சிந்தாகினி மெல்லேஷம் – அறிவியல் / பொறியியல் – ஆந்திரா
ஜிதேந்திர நாத் கோஸ்வாமி – அறிவியல் / பொறியியல் – அஸ்ஸாம்
தரிபள்ளி ராமையா – சமூக சேவை – தெலங்கானா
கிர்ஷி பரத்வாஜ் – சமூக சேவை – கர்நாடகா
காரிமுக் ஹக் – சமூக சேவை – மேற்கு வங்கம்
பிபின் கனத்ரா – சமூக சேவை – மேற்கு வங்கம்
நிவேதிதா ரகுநாத் பீடே – சமூக சேவை – தமிழகம்
அப்பாசாஹேப் தர்மாதிகரி – சமூக சேவை – மகாராஷ்டிரா
பல்பீர் சிங் சீசேவால் – சமூக சேவை – பஞ்சாப்
விராட் கோலி – விளையாட்டு / கிரிக்கெட் – டெல்லி
சேகர் நாயக் – விளையாட்டு / கிரிக்கெட் – கர்நாடகா
விகாஸா கவுடா – விளையாட்டு / வட்டு எறிதல் – கர்நாடகா
தீபா மாலிக் – விளையாட்டு / தடகளம் – ஹரியானா
மாரியப்பன் தங்கவேலு – விளையாட்டு / தடகளம் – தமிழகம்
தீபா கர்மாகர் – விளையாட்டு / ஜிம்னாஸ்டிக் – திரிபுரா
பிஆர் ஸ்ரீஜேஷ் – விளையாட்டு / ஹாக்கி – கேரளா
சாக்‌ஷி மாலிக் – விளையாட்டு – மல்யுத்தம் – ஹரியானா
மோகன் ரெட்டி வெங்கட்ராம போதனபு – வர்த்தகம் / தொழில் – தெலங்கானா
இம்ரான் கான் (என்ஆர்ஐ/பிஐஓ) – கலை / இசை – அமெரிக்கா
ஆனந்த் அகர்வால் (என்ஆர்ஐ/பிஐஓ) – இலக்கியம் / கல்வி – அமெரிக்கா
எச்.ஆர்.ஷா (என்ஆர்ஐ/பிஐஓ) – இலக்கியம் / கல்வி / இதழியல் – அமெரிக்கா
சுனிதி சாலமன் (மறைவு) – மருத்துவம் – #தமிழகம்
அசோக் குமார் பட்டாச்சார்யா (மறைவு) – தொல்லியல் – மேற்கு வங்கம்
டாக்டர் மாபுஸ்கர் (மறைவு) – சமூக சேவை – மகாராஷ்டிரா
அனுராதா கொய்ராலா (மறைவு) (வெளிநாட்டினர்) – சமூக சேவை – நேபாளம்


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச சுங்க தினம் (International Customs Day).
சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு அதன் முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன் பின்னர் 161 சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். இந்த அமைப்பு உலகின் 98 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. சர்வதேச சுங்க தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.
2.இன்று ஆஸ்திரேலியாவில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3.மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைக்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1837.
4.ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1949.
5.இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரான நாள் 26 ஜனவரி 1950.
6.ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 26 ஜனவரி 1962.
7.இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியான 26 ஜனவரி 1965.

 

– தென்னகம்.காம் செய்தி குழு