current-affairs

தமிழகம்

1.தெற்கு ரயில்வே முதன்மைப் பொறியாளர்(பாலங்கள்) சுயம்புலிங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாம்பன் தூக்குப் பாலத்தின் எடை 836 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2.தமிழக அரசு 2016-2017ஆண்டு  திருமண உதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக ரூ. 204 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 12,500 பெண்கள் பயனடைவார்கள்.

இந்தியா

1.சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டக் கவுன்சிலின் கூடுதல் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.சீனாவின் குயிசு மாகாணத்தில் வேற்று கிரக வாசிகள் நடமாட்டத்தை கண்டறியும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை நாட்டிற்கு அர்பணித்துள்ளது.இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடை கொண்டதாகும்.
2.சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் ‘ஹெபே வாண்டா சிட்டி’  என்ற மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.160 ஹெக்டேர் நிலபரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.இந்த பூங்காவை டாலியன் வாண்டா குரூப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3.ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ம் தேதி அனைத்து நாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் உலக சமாதானம் பற்றிய கருத்தியலை வலுப்படுத்தும் வகையில்  சர்வதேச அமைதி தினத்தை கடைபிடிக்கிறது. 2016-ஆம் ஆண்டிற்கான இதன் கருப்பொருள் “The Sustainable Development Goals: Building Blocks for Peace” ஆகும்.
4.ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்ட நாள் 26 செப்டம்பர் 1934.
5.இந்தோனீசியா ஐநாவில் இணைந்த நாள் 26 செப்டம்பர் 1950.

விளையாட்டு

1.கான்பூரில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்டில் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். அஸ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை  படைத்துள்ளார்.இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் கிரிமெட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.பாகிஸ்தானின் வாக்கர் யூனூஸ், ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆகியோர் 38   டெஸ்ட்   போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
2.கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவன் வேலவன் செந்தில்குமார் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்  பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை வேலவன் செந்தில் குமார் பெற்றுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

1.இன்று ஈரோடு மாவட்டம்.

ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை(இரண்டு ஓடை) எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு என ஆனது.இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர். ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன.1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.