இந்தியா

1.2017-ஆம் ஆண்டின் P.C. சந்திர புரஷ்கார் விருதை நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல உரிமை ஆர்வலருமான கைலாஷ் சத்யார்தி பெற்றுள்ளார்.
2.Tata நிறுவனத்தின் துணை நிறுவனமான TAL Manufacturing Solutions சார்பில், முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்திலான தொழிற்சாலை பயன்பாட்டுக்கான இயந்திர மனிதன் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கு BRAVO ROBOT, சுருக்கமாக BRABO என பெயரிட்டுள்ளனர்.
3.போக்குவரத்து விதிகளை மீறும் போலீஸ்காரர்களை பற்றி தகவல் தரும் பொதுமக்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநிலம், ரோத்தக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.


உலகம்

1.விண்வெளியில் அதிக நாட்கள் இருந்தவர் என்ற சாதனையை அமெரிக்க விண்வெளி வீராங்கனை Peggy Whitson புரிந்துள்ளார்.24 ஏப்ரல் 2017 வரை 534 நாட்கள் இவர் விண்வெளியில் இருந்துள்ளார்.
2.கணிதத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஏபல் பரிசை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Yves Meyer பெறுகிறார்.2016-ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசை Briton Andrew Wiles வென்றது நினைவிருக்கலாம்.


விளையாட்டு

1.சீனாவில் நடந்து வரும் ஆசிய கிராண்ட்பிரீ தடகள போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பறியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day).
அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
2.இன்று தான்சானியாவில் தேசிய நாள் ஆகும்.
3.இன்று கணித மேதை ராமானுசன் மறைந்த தினம்.இவர் மறைந்த தேதி 26 ஏப்ரல் 1920.
4.நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதிய நாள் 26 ஏப்ரல் 1962.

 

– தென்னகம்.காம் செய்தி குழு