Current-Affair-Logo

இந்தியா

1.இன்று  நோபல் பரிசு பெற்ற இந்திய அருட்சகோதரி அன்னை தெரேசா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 26 ஆகஸ்டு 1910.
2.சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) , இந்திய தொழில் கூட்டமைப்பு , அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், இன்சியாட் (INSEAD) மற்றும் சர்வதேச பிஸினஸ் பள்ளி ஆகியவை இணைந்து தயாரித்த சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு (GII) பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது.சென்ற வருடம் 85-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் உள்ளது.சுவீடன் இரண்டாம் இடத்திலும்,பிரிட்டன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்கா நான்காவது இடத்திலும்,பின்லாந்து ஐந்தாவது இடத்திலும்,சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும் உள்ளன.தொழில் சூழ்நிலை பொறுத்தவரை இந்தியா 117-வது இடத்தில் உள்ளது. மேலும் தொழிற்கல்வியை பொறுத்தவரை இந்தியா 118-வது இடத்தில் இருக்கிறது.சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங் பட்டதாரிகளை உருவாக்குவதில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.
3.BSNL தொலைத்தொடர்பு நிறுவனம்  ரூ.1099க்கு அன்லிமிட்டெட் 3ஜி மொபைல் டேட்டா சேவையினை வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்த அதிரடி அறிவிப்பால் நாட்டிலேயே 3ஜி மொபைல் டேட்டா சேவையில் BSNL முன்னிலை வகிக்கிறது.
4.ஆந்திரப் பிரதேச அரசு குற்றவாளிகளிடம் இருந்து மரபணு மாதிரிகளை சேகரித்து ஒரு தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக துவக்கியுள்ளது.

உலகம்

1.ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் 26 ஆகஸ்டு 1920.
2.முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமான நாள் 26 ஆகஸ்டு 1978.

விளையாட்டு

1.ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க மகளிர் அணி  9 முறை பங்கேற்றுள்ளது.அதில்  8  முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் சேர்த்து தொடர்ச்சியாக 6-ஆவது முறையாக  தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
2.சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் தாமஸ் பேச்.இவர் ஜெர்மனியை சேர்ந்தவர் ஆவார்.