current-affairs

தமிழகம்

1.இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளம் விஞ்ஞானி விருதை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் கடல்சார் மற்றும் நிலத்தியல் துறை உதவி பேராசிரியர் சே.செல்வம் பெற்றுள்ளார்.தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், `மெரினா லேப்’ சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தியா

1.இந்திய – சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்களை இந்திய திபெத் எல்லைக் காவல் படை நியமித்துள்ளது.
2.ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு இ-அஞ்சல் வாக்கு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
3.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இப்போது எல்பிஜி விற்பனையில் இறங்கி உள்ளது.முதல் கட்டமாக 4 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை இந்த நிறுவனம் விற்கத் தொடங்கி இருக்கிறது.
4.உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றான இந்திய தலைநகர் தில்லியில், தற்போது காற்று மாசடைவதைத் தடுக்க ‘ஸ்மார்ட்ஃபோன்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்  பொதுமக்கள், கட்டட பணிகள் அல்லது சாலையில் உள்ள புழுதிகள், மற்றும் எரிந்து கொண்டிருக்கும் சருகுகள் மற்றும் பூங்காக்களில் உள்ள குப்பைகள் போன்றவை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
5.வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலகம்

1.பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக  205.5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

வர்த்தகம்

1.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி விலகியதையடுத்து,அவருக்கு பதிலாக அடுத்த நான்கு மாத காலத்துக்கு ரத்தன் டாடா தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

1.ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயர்,சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.
2.இந்த ஆண்டுக்கான சர்வதேச டைவிங் போட்டி தென்மேற்கு சீனாவின் Guizhou மாகாணத்தில், 76 மீட்டர் உயரும், 80 மீட்டர் அகலமும் கொண்ட பிரமாண்ட Chihui நீர்வீழ்ச்சியில் நடைபெற்றது.இதில் 200 புள்ளிகளுடன் செக் குடியரசு வீரர் Michal Navrati சாம்பியன் பட்டம் வென்றார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

31.இன்று விழுப்புரம் மாவட்டம்.

1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, (முந்தைய) தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது.  தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.
காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை செயங்கொண்டார் இயற்றினார். இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன்,விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர் பெற்றுள்ளது.விழுப்புரத்திற்கு விழிமா நகரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.