தமிழகம்

1.நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 121-வது மலர்க் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த கண்காட்சியின் சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பெற்றுள்ளது .


இந்தியா

1.சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு,மறைந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
2.பெண் குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரத்தை பேணும் பொருட்டு,அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்க,கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உத்தரபிரதேசம் மொரதா பாத்தைச் சேர்ந்த ரவி குமார் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.இவர் சுமார் 650 அடி உயரத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது மாயமானார் பின் சடலமாக மீட்கப்பட்டார்.


உலகம்

1.ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டன் நடிகர் ரோஜர் மூர் (89), காலமானார்.


விளையாட்டு

1.பிரெஞ்ச் லீக் 1 கால்பந்து போட்டியில் முதன்முறையாக மொனாக்கோ அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் (International Missing Children’s Day).
இந்த நாள் காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது
2.போர்மோசா குடியரசு அமைக்கப்பட்ட நாள் 25 மே 1895.
3.எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்ட நாள் 25 மே 1966.

– தென்னகம்.காம் செய்தி குழு