Current-Affairs-Updates

தமிழகம்

1.15வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது.தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
2.13-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று பதவியேற்றார்.
3.மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
4.இன்று கவுண்டமணி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 25 மே 1939.

இந்தியா

1.மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2.இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
3.இந்தியாவில் மதுவால் 96 நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர்.நாள் ஒன்றிற்கு 15 பேர் பலியாகின்றனர்.தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
4.கேரளாவின் புதிய முதல்-மந்திரியாக மார்க்சிஸ்டு தலைவர் பினராயி விஜயன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன் 18 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர்.