தமிழகம்

1.தமிழக சட்டசபை சபாநாயகர் பி.தனபாலை பதவி நீக்க கோரி,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ,மார்ச் 23ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
2.சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ள கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்தியா

1.கோவா சட்டப் பேரவை துணைத் தலைவராக பாஜக உறுப்பினர் மைக்கேல் லோபோ  நேற்று தேர்வு செய்யப்பட்டார்.முன்னதாக பேரவைத் தலைவராக பாஜக உறுப்பினர் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.


உலகம்

1.சர்வதேச நாடுகளின் 2016-ம் ஆண்டுக்கான மனித வள மேம்பாடு பட்டியலை ஐ.நா. சபை வளர்ச்சி திட்டம் வெளியிட்டுள்ளது.இதில் நார்வே முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், சுவிட் சர்லாந்து 3-வது இடத்திலும்,இலங்கை 73-வது இடத்திலும்,சீனா 90-வது இடத்திலும், மாலத்தீவுகள் 105-வது இடத்திலும்,கபான் 109-வது இடத்திலும், எகிப்து 111-வது இடத்திலும், இந்தோனேசியா 113-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 119-வது இடத்திலும், ஈராக் 121-வது இடத்திலும், இந்தியா 131-வது இடத்திலும், பூடான் 132-வது இடத்திலும்,வங்காள தேசம் 139-வது இடத்திலும்,நேபாளம் 144-வது இடத்திலும்,பாகிஸ்தான் 147-வது இடத்தையும் பிடித்துள்ளன .இந்த பட்டியலில் மொத்தம் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன.


விளையாட்டு

1.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம் (International Day of Remebrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade).
கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்ற நாள் 25 மார்ச் 1857.
3.முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்ட நாள் 25 மார்ச் 1954.

– தென்னகம்.காம் செய்தி குழு