தமிழகம்

1.கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடி உயர ஆதியோகி – சிவன் திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.


இந்தியா

1.நாட்டிலேயே முதன் முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் பி.சதாசிவம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
2.உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 4-ம் கட்டமாக 53 தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
3.மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி மற்றும் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவற்றை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், டெலிநார் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.புனேவில் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது.
2.இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.ஒரு ஹோம் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை அஸ்வின்  படைத்துள்ளார்.1979-80 காலகட்டத்தில் கபில் தேவ் 13 டெஸ்டுகளில் 63 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.இந்த சாதனையை அஸ்வின் 10-வது டெஸ்டில் முறியடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள் 25 பிப்ரவரி 1988.
2.சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்ற நாள் 25 பிப்ரவரி 1836.
3.தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்ற நாள் 25 பிப்ரவரி 1837.
4.சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்ட நாள் 25 பிப்ரவரி 1925.
5.அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்ற நாள் 25 பிப்ரவரி 1932.

 

– தென்னகம்.காம் செய்தி குழு