tamil

இந்தியா

1.சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வரும் செய்தியாளர் மாலினி சுப்பிரமணியம் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான சர்வதேச விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருடன் எல் சால்வடோர் நாட்டின் ஆஸ்கார் மாட்னெஸ் மற்றும் துருக்கியின் கேன்டுண்டர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எகிப்திய புகைப்படச் செய்தியாளர் அபு சையது  ஆகியோரும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2.நவம்பர் 25-ம் தேதி தொடங்க இருந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் இருநாள் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
3.டிசம்பர் 31-ஆம் தேதி வரை “மொபைல் பேங்கிங்’ உள்ளிட்ட வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்வதாக ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
4.சிறந்த வேலைவாய்ப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிய பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் இந்தியாவின் காரக்பூர் IIT 84வது இடம் பெற்றுள்ளது.IIT மும்பை 100 இடங்களுக்குள்ளும் , IIT சென்னை, IIT டெல்லி , டில்லி பல்கலை ஆகியவை 200க்குள்ளும் இடம் பெற்றுள்ளன.
5.புதுடெல்லியில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் ( UPSC ) தனது நீண்ட , நெடிய வரலாற்று ஆவணங்களை ( 1916 முதல் நடத்தி வரும் தேர்வுகள் பற்றிய ) பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியம் ஒன்றை  அமைத்துள்ளது.
6.மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய நகரமாக கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கு 1 லட்சம் பேருக்கு 40 பேர் என்ற அளவில் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.தேசிய சராசரி என்பது 1 லட்சம் பேருக்கு 20 பேர் ஆகும். கேரளா மாநிலம் முழுமைக்கும் 1 லட்சம் பேருக்கு 14 பேர் என்ற அளவில் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

உலகம்

1.துபாயில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுமியான “கேஹாசன் பாசு”,கேமரூன் நாட்டைச் சேர்ந்த திவினா, சிரியாவைச் சேர்ந்த முசூன் அல்மெல்லான் ஆகியோருக்கு ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற சர்வதேச குழந்தைகள் உரிமை அமைப்பின் சார்பில் வழங்கப்படும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ( International Labour Organization ) டைரக்டர் ஜெனராலாக இங்கிலாந்தை சேர்ந்த Guy Ryder மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது பதவிக்காலம் 2012 முதல் 2017வரை உள்ளது. தற்போது 2017 அக்டோபர் முதல் 2022 வரை மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் (International Day for the Elimination of Violence Against Women).
உலகளவில் பெண்கள், பலவிதமான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்குக் காட்டி அதற்கான, நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஐ.நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.
2.இன்று இந்தோனேசியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
3.டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட நாள் 25 நவம்பர் 1981.
4.சோவியத் யூனியன் போர் தொடுத்தால் கூட்டாக எதிர்கொள்ள ஜெர்மனி- ஜப்பான் ஒப்பந்தம் செய்த நாள் 25 நவம்பர் 1936.