தமிழகம்

1.தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களில் பெட்ரோலியம், ரசாயனம் உள்ளிட்ட தொழில்கள் சார்ந்த பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.மத்திய அரசு அலுவலங்களில் உயரதிகாரிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள் புகார் அளிப்பதற்காக ‘ஷி-பாக்ஸ்’ என்ற பெயரில் இணையவழி உதவி மையத்தை மேனகா காந்தி தொடங்கி வைத்துள்ளார்.
2.நாட்டின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.இதையொட்டி, பிரணாப் முகர்ஜிக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.
3.நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருநங்கை ஜோயிதா மண்டல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதாலத்) நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமெரிக்க கடற்படையில் , அணு ஆயுத வல்லமை மிக்க USS Gerald Ford என்ற போர்க்கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.கலிபோர்னியாவில் நடைபெற்ற யோனக்ஸ் யு. எஸ். ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் H.S. பிரனாய், மற்றொரு இந்திய வீரரான பாருபள்ளி காஷ்யப் – ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1868 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
2.1908 – அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.
3.1925 – சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.
4.1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.
5.2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு