தமிழகம்

1.தமிழகத்தை சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்த கலாம்சாட் என்ற உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை நாசா ஜூன் 22ல் விண்ணில் செலுத்தியது.


இந்தியா

1.நர்சரி முதல் முனைவர் பட்டம் வரை இலவச கல்வி மற்றும் அரசு பள்ளியில் பயிலும் அனைவருக்கும் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
2.நீட் தேர்வு – 2017 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்தீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும்,மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


விளையாட்டு

1.ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளன.இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக வெண்புள்ளி தினம் (World Vitiligo Day).
வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது. இது சிறியவர் முதல் பெரியவர் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும். இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று மாலுமிகள் தினம் (Day of the Seafarer).
உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. இதற்கு மாலுமிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும் அவர்களை கௌரவிக்கவும் ஜூன் 25 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை சர்வதேச கடல்கள் அமைப்பு 2011ஆம் ஆண்டு அறிவித்தது. இது ஐ.நா. தினப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு