Current-Affair-Logo

தமிழகம்

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு கோரிக்கை வைத்தால் குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
2.இன்று தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 25 செப்டம்பர் 1899.

இந்தியா

1.உலகின் சுகாதாரம் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 143வது இடம் கிடைத்துள்ளது.முதல் 5 இடங்களில் ஐஸ்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன், பிரிட்டன், ஃபின்லாந்து நாடுகள் உள்ளன.இந்த பட்டியலில் மொத்தம் 188 நாடுகள் உள்ளன.இந்த பட்டியல் ஐநா., பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2.கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காகித பயன்பாடு இல்லாமல்  சட்டப்பேரவை முழுவதும் மின்னணுமயமாக மாற்றப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.
3.உலக வங்கிக்கான இந்தியாவின் இயக்குனராக வங்கதேசத்தவரான ஜூனைட் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
4.இஸ்ரேல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவாவில் கடல் அலைகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

உலகம்

1.பிரான்ஸ் அரசிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில்  இந்தியாவும், பிரான்ஸும்  கையெழுத்திட்டு உள்ளனர்.
2.யாஹூ நிறுவனம்  ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை வெளியிட்டுள்ளது.
3.அமெரிக்காவில் எச்.ஐ.வி. மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்ய அரவிந்தோ நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு-மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
4.ரஷிய உளவு அமைப்புக்குப் புதிய தலைவராக செர்கேய் நாரிஷ்கின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
5.பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைத்து விதமான நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் 300 கோடி டாலர் (சுமார் ரூ. 20,000 கோடி) நிதியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
6.இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக தரன்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.