நடப்பு நிகழ்வுகள் – 25 ஏப்ரல் 2017
தமிழகம்
1.2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை – வேம்பத்தூர் (எம்) கிருட்டினன்,
தமிழ்ச்செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் 25,000/- பாராட்டுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.
இந்தியா
1.இந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் “தாதாசாகேப் பால்கே” விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.இந்தியாவைச் சேர்ந்த 101 வயது பெண் கவுர், ஆக்லாந்தில் நடைபெற்ற வேல்ட் மாஸ்டர்ஸ் கேம்ஸ், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.இது இவர் பெறும் 17 வது தங்கப் பதக்கம் ஆகும்.
2.மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பேப்லோ குயவாஸ் ஜோடி, ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ் மற்றும் மார்க் லோபஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இன்றைய தினம்
1.இன்று உலக மலேரியா தினம் (World Malaria Day).
ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.
2.ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் “ஹிட்லரின் நாட்குறிப்புகள்” நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் “ஸ்டேர்ன்” இதழ் வெளியிட்ட நாள் 25 ஏப்ரல் 1983.
– தென்னகம்.காம் செய்தி குழு