current-affairs

தமிழகம்

1.இன்று  தமிழக முன்னாள் நடிகரும் தற்போதைய  அரசியல்வாதியுமான விஜயகாந்த் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 25 ஆகஸ்டு 1952.
2.தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பசுமை தமிழகம் எனும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.அவர் மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்தியா

1.இன்று பகவான் கிருஷ்ணர் பிறந்த நாள்.அதை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.
2.இந்தியாவில் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் மகாராஷ்டிரா(29.48 மில்லியன்) முதல் இடத்தில உள்ளது.தமிழ்நாடு(28.02 மில்லியன்) இரண்டாவது இடத்தில உள்ளது.தமிழ்நாட்டில் நகரங்களில் 21.6 மில்லியன்),கிராமப்புறங்களில் (6.86 மில்லியன்) மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இன்டர்நெட்டை (342.65 மில்லியன்) மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள இணையதளங்கள் 1.google.co.in,2.google.com,3.Facebook.com.
3.தேசிய கண்தான இருவார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.கண்தானத்தில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலகம்

1.சீனாவில் ஹூணன் மாகாணத்தில் ஷாங்ஜியாஜியே மலைப் பூங்காவின் இரு மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகவும்  உயரமான மற்றும் நீளமான கண்ணாடிப்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தின் நீளம் 430 மீ., (1,400 அடி).பூமியிலிருந்து 300 மீ., உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் நடந்து செல்லலாம்.ஹாய்ம் டோடன் எனும் இஸ்ரேல் இன்ஜினியர் இதனை வடிவமைத்துள்ளார்.
2.உலகின் மிக நீளமான விமானமான ஏர்லேண்டர் -10 ( Airlander – 10 ) சோதனை ஓட்டத்தின் போது டெலிபோன் கம்பத்தில் மோதி சிறிய விபத்துக்குள்ளானது.ஆனால் விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
3.பெரியம்மையை நோய் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவ விஞ்ஞானி டொனால்டு ஹெண்டர்ஸன் காலமானார்.அவருக்கு வயது 87.
4.இன்று உருகுவை விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 25 ஆகஸ்டு 1825.
5.வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்ற நாள்  25 ஆகஸ்டு 1981.
6.வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்கு மிகக்கிட்டவாகச் சென்ற நாள்  25 ஆகஸ்டு 1989.