Current-Affairs-Updates

இந்தியா

1.இந்திய கடற்படையில் 55 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கி போர் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறவுள்ளது.
2.“இந்தியாவில் சமரசத்தீர்வை வலுப்படுத்துவதற்கான தேசிய முன்முயற்சி ” என்னும் மாநாடு டெல்லியில் அக்டோபர் 21 முதல் 23 வரை நடைபெற்று முடிந்துள்ளது.
3.பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் குழாய் மூலம் எரிவாயு (உர்ஜா கங்கை) அனுப்பும் திட்டத்துக்கான அடிக்கல்லை நிறுவியுள்ளார்.மேலும் உலகின் மிகவும் பழைமையான நகரமாக கருதப்படும் வாராணசிக்கு அர்ப்பணிக்கும் விதமாக புதிய தபால் தலையை மோடி வெளியிட்டுள்ளார்.
4.தேசிய அளவில் திருச்சி விமான நிலையம் பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.மேலும் கோவைக்கு 8-வது இடமும், மதுரைக்கு 14-வது இடமும் கிடைத்துள்ளன.இந்த வரிசையில் சண்டிகர்  விமான நிலையம் முதல்  இடத்தையும்,ராய்ப்பூர் இரண்டாவது இடத்தையும்,உதய்ப்பூர் மூன்றாவது  இடத்தையும் பிடித்துள்ளன.இந்த முடிவுகளை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

விளையாட்டு

1.ரஷ்யாவில் 2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சின்னமாக ஓநாய் சின்னம் தேர்வாகியுள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

30.இன்று விருதுநகர் மாவட்டம்.

விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
விருதுநகரின் சிறப்பு
-பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.
-“வியாபார நகரம்” என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன.பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது.
-புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது