தமிழகம்

1.இந்தியாவின் முதல் Aquatic Rainbow Technology Park (ARTP) சென்னையில் அமைக்கப்பட இருக்கிறது .


இந்தியா

1.இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, காது கேளாதவர்கள் இயக்கும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒளிரும் தன்மையுடைய இலச்சினை (Logo) ஒட்டும் முறையை தெலுங்கானா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


உலகம்

1.பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி 37th Exercise Balikatan – 2017 , பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
2.ஜோர்டான் நாட்டில், ஆசியா , ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களை சார்ந்த பல நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சி 7th Eager Lion 2017 நடைபெற்று முடிந்துள்ளது.


விளையாட்டு

1.ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் ஜூலை 06 முதல்  ஜூலை 09 வரை நடைபெறவுள்ள 22வது ஆசிய தடகள போட்டியின் சின்னமாக OLLY (அழிந்து வரும் கடல் ஆமை) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2.சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில், அபிஷேக் வர்மா, சின்யா ராஜு ஸ்ரீதர், அமன்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா இணை, ப்ளே ஆஃப் சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


இன்றைய தினம்

1.நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்ட நாள் 24 மே 1883.
2.விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்ட நாள் 24 மே 2006.

– தென்னகம்.காம் செய்தி குழு