தமிழகம்

1.அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


உலகம்

1.வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்,வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
2.நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார மேதை கென்னத் ஜே (95), ஆரோ அமெரிக்கா நாட்டில் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள பாலோ நகரில் காலமானார்.
3.அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான “நாசா”வின் விஞ்ஞானிகள் பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.நமது பூமியில் இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகங்கள் உள்ளன.இந்த 7 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இதற்கு “டிராபிஸ்ட்-1″ எனப் பெயரிட்டுள்ளனர்.


விளையாட்டு

1.சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்.ஐ.எச்.) சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு பெல்ஜியம் கேப்டன் ஜான் டோமென், நெதர்லாந்து வீராங்கனை நவோமி வான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  24 பிப்ரவரி 1948.
2.இன்று தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  24 பிப்ரவரி 1886.
3.நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 1920.
4.வாட்ஸ் ஏப் நிறுவனம் ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 2009.

 

– தென்னகம்.காம் செய்தி குழு