current-affairs

இந்தியா

1.பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றலாம் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
2.தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஸ்ரின்தோர்ன் 7 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த நவம்பர் 20-ம் தேதி இந்தியா வந்துள்ளார்.சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்ட தாய்லாந்து இளவரசிக்கு உலக சமஸ்கிருத விருது டெல்லியில் வழங்கப்பட்டுள்ளது.இவ்விருதினை துணை  ஜனாதிபதி   ஹமீத் அன்சாரி வழங்கினார்.
3.சீனாவிலிருந்து கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் 84% சூரிய தகடுகள் மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

உலகம்

1.அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே பசிபிக் பெருங்கடல் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
2.சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கடந்த நவம்பர் 16-ம் தேதி தெரிவித்துள்ளார்.
3.மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட 58 வயதுப் பெண்ணின் மூளையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள்  கணிப்பொறியுடன் தொடர்புகொள்ளும் கருவி ஒன்றை அறுவை சிகிச்சை மூலமாகப் பதித்துள்ளனர்.மேலும் உலக அளவில் முதல் முறையாக மூளையில் கணிப்பொறியை இயக்கும் கருவியைப் பதிக்கும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
4.சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரபலமான ட்விட்டர் தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.தொடக்கத்தில் ட்விட்டரில் அதன் முகப்புப் பக்கத்தில் 5 வார்த்தைகள் மட்டுமே பதிவிட முடியும். தற்போது 140 எழுத்துகள் வரை பயன்படுத்த முடியும்.

விளையாட்டு

1.முன்னதாக ஐசிசி ஒரு நாள் போட்டித் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்த இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி தற்போதுடி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.டெஸ்ட் தரவரிசையில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
2.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 60-ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான மானவ்ஜித் சிங் சாந்து தங்கம் வென்றுள்ளார்.ரனீந்தருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.வெண்கலப்பதக்கத்தை கினான் செனாய் வென்றார்.

சிறப்பு செய்திகள்

பிரித்வி ஏவுகணை

பிரித்வி – 1 ஏவுகணை == இந்திய ராணுவத்தின் தரைப்படை ஆயுதம்.

பிரித்வி – 2 ஏவுகணை == இந்திய விமானப்படை ஆயுதம்.

பிரித்வி – 3 ஏவுகணை == இந்திய கடற்படை ஆயுதம்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று படி வளர்ச்சி நாள் (Evolution Day).
சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று வெளியிட்டார். நூல் வெளியிடப்பட்ட நாள் படிவளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்ட 150ஆவது ஆண்டு நிறைவு விழாவானது 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
2.இன்று துருக்கியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
3.இன்று இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 24 நவம்பர் 1961.
4. 24 நவம்பர் 1969-ம் ஆண்டு சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.