தமிழகம்

1.தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி S.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.ராஞ்சிக்கு ( ஜார்கண்ட் ) அடுத்து பெங்களூருவில் சிறப்பான வசதிகளை கொண்ட பட்டு வளர்ப்பு மையத்தை ( centre of excellence for sericulture) மத்திய அரசு அமைத்துள்ளது.
2.தேசிய பாதுகாப்பு படையை ( National Security Guard – NSG ) சேர்ந்த கருப்பு பூனை படை கமாண்டோ வீரர்களின் அணிவகுப்பு  2017 குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
3.இந்திய உணவு மற்றும் வேளாண்மை கவுன்சில் [ Indian Council of Food and Agriculture (ICFA) ] வழங்கும் சர்வதேச வேளாண்மை தலைமை விருது [ Global Agriculture leadership Award 2016 ] தொழிலதிபர் ரத்தன் டாடா வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
4.மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பை-கோவா இடையே 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள், உணவகங்கள், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்யக் கூடிய கடைகள் உள்ளிட்ட 1,300 வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


உலகம்

1.உலகின் கார்பன் டை ஆக்சைடு அளவை கண்காணிக்க சீனா Tansat என்ற சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.இதற்கு முன்பு  ஜப்பான் மற்றும் அமெரிக்கா இதே சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
2.கலிபோர்னியா மாநில நகரான தெற்கு சான்பிரன்ஸிஸ்கோ நகர மேயராக சென்னை ஐஐடியில் படித்த பிரதீப் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3.போலந்தின் விரோல்கலா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.


விளையாட்டு

1.சமீபத்தில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 137வது இடத்திலிருந்து இரண்டு இடம் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணி அடைந்த சிறந்த இடம் இதுதான். இதற்கு முன், 2009ல் 134வது இடத்தைப் பிடித்திருந்தது.அர்ஜென்டினா அணி முதல் இடத்தையும்,பிரேசில் அணி இரண்டாவது இடத்தையும்,ஜெர்மனி அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மகேஷ் பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை ஜூனியர் (18 வயதுக்குள்பட்டோருக்கானது) ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
4.இந்திய கைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆகியவை சார்பில் 49 அணிகள் பங்கேற்கும்  65-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.


இன்றைய தினம்

1.இன்று லிபியா விடுதலை அடைந்த நாள்.
2.ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிய நாள் 24 டிசம்பர் 1906.
3.இன்று  தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 29வது நினைவு நாள்.இவர் இறந்த தேதி 24 டிசம்பர் 1987.

 

– தென்னகம்.காம் செய்தி குழு