இந்தியா

1.ஒடிஷா மாநிலத்தில் மகாநதியின் துணை நதியான கத்தஜோடி நதியின் குறுக்கே, புவனேஸ்வரம் மற்றும் கட்டாக் நகரங்களை இணைக்கும் விதமாக , 2.81 கி.மீ. நீளம் கொண்ட புதிய பாலத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.இந்த பாலத்திற்கு “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்” பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2.நாட்டின் 14வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்தின் புதிய செயலாளராக பொதுத் துறை நிறுவனங்களின் தேர்வாணையத் தலைவர் சஞ்சய் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ராஷ்ரபதி பவணின் பத்திரிகை செயலாளராக மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக் கோவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளராக மூத்த குஜராத் மாநில வனத்துறை அதிகாரி பரத் லால் பொறுப்பேற்க உள்ளார்.
3.மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை மலையாள செய்தி நிறுவனமான ‘மாத்ரு பூமி’ அறிவித்துள்ளது.
4.இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான உடுப்பி ராமச்சந்திர ராவ் (85) பெங்களூருவில் இன்று காலமானார்.


விளையாட்டு

1.இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இங்கிலாந்து மகளிர் அணி உலகக்கோப்பை வென்றது.இங்கிலாந்து மகளிர் அணி வெல்லும் நான்காவது உலகக்கோப்பையை இதுவாகும். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செய்யல்பட்டவர் மிதிலி ராஜு ஆவார்.


இன்றைய தினம்

1.1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
2.1969 – அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு