Current-Affairs-Updates

தமிழகம்

1.வறுமையில் வாடும் மறைந்த நடிகர் பசி நாராயணனின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

உலகம்

1.உலக வரலாற்றிலேயே முதல் முறையாக  குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமை 54 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.
2.ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜார்ஜியா வீராங்கனை நினோ  தனது மகன் டிசாட்னேவுடன் பங்கேற்கிறார்.
3.உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள ‘போகிமேன்–கோ’ செல்போன் விளையாட்டு, ஜப்பானில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
4.பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்ட நாள் 24 ஜூலை 1924.
5.லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்த நாள் 24 ஜூலை 2007.

விளையாட்டு

1.போலாந்தின் பைட்கோஸ்கசில் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 86.48 மீ., தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.