இந்தியா

1.மத்திய உள்துறை செயலாளராக இருந்து வரும் ராஜீவ் மெஹ்ரிஷி பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து அப்பொறுப்புக்கு ராஜீவ் கவுபா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனையை பெங்களூருவில் “மை பெட்ரோல் பம்ப்” என்ற தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
3.யோகா கலைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கான முதலாவது பிரதம மந்திரி விருது , புனேவில் அமைந்துள்ள ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா பயிற்சிகத்திற்கு (Ramamani Iyengar Memorial Yoga Institute, Pune) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4.கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.8165 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
5.இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலங்களில் முதலாவதாக கொல்கத்தா SSKM மருத்துவமனையில் உறுப்பு வங்கி (Organ Bank) துவங்கப்பட உள்ளது.


உலகம்

1.சௌதி அரேபியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 100 ரியால்கள் குடும்ப வரி ஜூலை 01 முதல் விதிக்கப்படும் என சௌதி அரசு அறிவித்துள்ளது.
2.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக பதவி வகித்து வந்த முகமது பின் நயீப் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.UNICEF அமைப்பின் நல்லெண்ண தூதராக 19 வயதான சிரியா நாட்டின் அகதி Muzoon Almellehan நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1571 – மணிலா நகரம் அமைக்கப்பட்டது.
2.2004 – நியூயார்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமாக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு