தமிழகம்

1.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று ஆரம்பமானது.இந்த கூட்டத் தொடரில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
2.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்தியா

1.மத்திய வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுப்ரமணியம் ஜெய்சங்கரின் பதவி காலம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் சக்திகாந்த் தாஸின் பதவி காலமும் மேலும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் அமீனா குரீப் ஃபகீமிடம் அளித்தார். அதையடுத்து அவரது மகன் பிரவீந்த் ஆட்சிப் பொறுப்பேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
2.பசிபிக் நாடுகளில் தடையில்லா வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.டி.பி.பி. என்றழைக்கப்படும் இந்த அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
3.அயல்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


விளையாட்டு

1.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.இந்த தொடரில் 34 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் நுழைந்துள்ளார்.
2.இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3 ஒரு நாள் தொடரில் மொத்தம் 2090 ரன்கள் குவிக்கப்பட்டது. 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இவ்வளவு  ரன் அதிகமாக குவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


இன்றைய தினம்

1.தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட நாள் 24 ஜனவரி 1857.
2.முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்த நாள் 24 ஜனவரி 1984.

 

– தென்னகம்.காம் செய்தி குழு