current-affairs

இந்தியா

1.சென்னை – அந்தமான் இடையில் கடலுக்கு அடியில் தொலைத் தொடர்பு கண்ணாடி இழை (ஃபைபர் ஆப்டிக்) கேபிள்கள் பதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.2016ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் இதழ் இந்தியவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி  முதலிடம் பிடித்துள்ளார்.அவரது  சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.முகேஷ் அம்பானி 9வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.இரண்டாவது இடத்தில் சன்பார்மா குழுமத்தை சேர்ந்த திலிப் சங்வியும்,மூன்றாவது இடத்தில் இந்துஜா சகோதரர்களும் உள்ளனர். போர்ப்ஸ் இதழ் அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது.
3.அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நவ்தேஜ் சிங் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார்.நவ்தேஜ் சிங் சர்னா தற்போது பிரிட்டனுக்கான இந்திய தூதராக உள்ளார்.விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என வெளியுறவு விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.
4.உலகின் முதல் 100 சுற்றுலாத் தலங்களை ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில், மும்பை 27-வது இடத்தையும், சென்னை 30-வது இடத்தையும்,தில்லி 48-வது இடத்திலும், கொல்கத்தா 62-வது இடத்திலும், புனே 91-வது இடத்திலும் உள்ளன.பயணிகள் இரவில் தங்கிச் செல்லும் அடிப்படையில் மும்பை உலகளவில் 10-வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகம்

1.குவைத்து நாட்டில் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா நடைபெற்றது.விழாவில் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக  தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு ‘குறுங்கவிச் செல்வன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதினை இந்திய-குவைத்து தூதர் சுனில்  செயின் வழங்கினார்.கவிஞர் மு.முருகேஷ் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர்.
2.அதிகத் திறன் வாய்ந்த ஏவுகணை என்ஜின் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியது.
3.ரஷியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
4.அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்ட நாள் 24 செப்டம்பர் 1789.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.