தமிழகம்

1.செல்போன் செயலி வழியாக (ஆன்ராய்டு செல்போன் செயலி வழியாக) மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2.சென்னையில் 22-வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


இந்தியா

1.குஜராத் மாநி்லம் மெஹ்சானா மாவட்டத்தில் வாத்நகர் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தனது தந்தையுடன் சேர்ந்து இந்த ரயில் நிலையத்தில் டீ விற்று வந்தார்.எனவே இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.


உலகம்

1.அமெரிக்க வாழ் இந்திய மருத்துவர் அமித் சக்ரபர்தி(57), கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிக்கு டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கோற்பந்து எனப்படும் நீளமான குச்சியை உருவாக்கி பிரெஞ்சு வீரர் கோஹ்லர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.17 அடி உயரமும், 7.4 அங்குல நீளமும் உடைய பில்லயர்ட்ஸ் கோற்பந்து எனப்படும் நீள குச்சியை இவர் உருவாக்கியுள்ளார்.மேலும் லாஸ் வேகாசை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் கின்னஸ் அமைப்பு இதனை உலக  சாதனையாக அறிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day for Laboratory Animals).
உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
2.முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்ட நாள் 24 ஏப்ரல் 1970.
3.முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமான நாள் 24 ஏப்ரல் 1981.

 

– தென்னகம்.காம் செய்தி குழு