Daily-Current-Affairs

தமிழகம்

1.இன்று நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை இறந்த நாள்.இவர் இறந்த தேதி 24 ஆகஸ்டு 1972.
2.இந்தியாவில் முதன் முறையாக 10 மற்றும்  12ம் வகுப்பு பாடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடங்களை எளிதில் கற்று கொள்ள தமிழக அரசு முப்பரிமான தொழில்நுட்பத்தில் TN SCHOOLS LIVE என்ற ஆன்ட்ராய்டு அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளது.Image recognition application technologyயைப் பயன்படுத்தி இந்த அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளது.
3.தமிழகத்தில் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
4.தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா

1.அந்தமான் – நிகோபார் தீவுகளின் ஆளுநராக ஜெகதீஷ் முகி பொறுப்பேற்றுக் கொண்டார்.அதேபோல் பஞ்சாப் ஆளுநராக வி.பி.சிங் பத்னோரும்,அஸ்ஸாம் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தும்,மணிப்பூர் மாநில ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லாவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
2.இரவிலும் பார்வையாளர்கள் தாஜ்மஹாலை அருகில் சென்று கண்டு ரசிப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3.பிரதமர் நரேந்திர மோடி காணொலி (வீடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை திறந்து வைத்தார்.
4.12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத ஒழிப்புப் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலகம்

1.ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 1936.
2.நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாள் 24 ஆகஸ்டு 1949.
3.அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 1954.
4.கேப்டன் மேத்யூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர்.இவர் கடந்த நாள் 24 ஆகஸ்டு 1875.
5.விண்டோஸ் 95 வெளியிடப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 1995.
6.புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 2006.
7.சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நாள் 24 ஆகஸ்டு 2008.
8.இன்று உக்ரைன் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 24 ஆகஸ்டு 1991.