current3

இந்தியா

1.புனேவில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஷ்வினி ஏக்போத்(44), கடந்த அக்டோபர் 22-ம் தேதி இரவு நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
2.உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவையில் இந்தியாவின் ஏர் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.டில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, பசிபிக் பெருங்கடல் ரூட் வழியாக 14.5 மணிநேரத்தில், 15,300 கிமீ தூரம் ஏர் இந்தியா விமானம் ஒன்று இடையில் நிற்காமல் இயக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு எமிரேட்ஸ் இயக்கிய துபாய் – ஆக்லாந்து ட்ரிப்தான் உலகின் தொலைதூர நான் – ஸ்டாப் ட்ரிப்பாக கருதப்பட்டது.ஆனால் இந்த சாதனை இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இருக்கும்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 19 மணிநேரத்தில் 16,500 கிமீ செல்லக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
3.இந்தியாவில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளன.மைசூரில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் இதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தச் சில வாரங்களில் ஆர்பிஐ இதனை வெளியிட முடிவு செய்துள்ளது.

உலகம்

1.இங்கிலாந்தின்  வேல்ஸ் கடற்பகுதியில் Cambrian Patrol exercise என்ற பெயரில் சர்வதேச அளவிலான கடற்பகுதி ரோந்துப்  போட்டியில் இந்திய ராணுவம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
2.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் பெண்மணி ஜுங்கோ தாபேய்(77), புற்றுநோயால் கடந்த அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.
3.சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள டி பார்க் பகுதியில், உலகிலேயே மிகப்பெரிய காற்று மாசுபாட்டை சுத்திகரிப்பதற்காக,காற்று சுத்தகரிப்பான் நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
4.இன்று ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day).
1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது.1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
5.இன்று உலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Inforamtion Day).
உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

29.இன்று மதுரை மாவட்டம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.