தமிழகம்

1.தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும்.
2.தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளர்,சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோக மித்திரன் (86), நேற்று மாலை காலமானர்.
3.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 3 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷை பொது பார்வையாளராகவும், ஐஆர்எஸ் அதிகாரி அபர்னா வில்லூரியை தேர்தல் செலவின பார்வையாளராகவும், ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்குமார் வர்மாவை காவல் பார்வையாளராகவும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


இந்தியா

1.காமன்வெல்த் நாடுகளின் தலைமை தணிக்கை அதிகாரிகளின் 23 வது மாநாடு டெல்லியில் மார்ச் 21 முதல் மார்ச் 23 வரை நடைபெற்றது.இதன் கருப்பொருள் Fostering Partnerships for Capacity Development in Public Audit ஆகும்.
2.உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டசபை சபாநாயகராக பா.ஜ.க எம்.எல்.ஏ பிரேம் சந்த் அகர்வால் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.ஆந்திர மாநிலம் கர்னூலில் விமான நிலையம் அமைப்பதற்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலத்தை வழங்க ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.சாம்சங் மொபைல் நிறுவனம் புதிதாக பேமெண்ட் சேவையைத் தொடங்கியுள்ளது.”சாம்சங் பே” என்ற பெயரில் இந்த மொபைல் பேமெண்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாஸாவின் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் “டபுள் டிராப்” பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லட் (73 புள்ளி) வெள்ளி பதக்கத்தையும்,சீனாவின் இங் குய் (52 புள்ளி) வெண்கல  பதக்கத்தையும் வென்றுள்ளனர்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம் (International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims).
பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
2.உலக காசநோய் தினம் (World Tuberculosis Day).
காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டு முதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.
3.நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பிய நாள் 24 மார்ச் 1965.

 

– தென்னகம்.காம் செய்தி குழு