தமிழகம்

1.பழம் பெரும் திரைப்பட இயக்குநர் மித்ரதாஸ் (103) சென்னையில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலமானார்.
2.சென்னை பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மான்ட்போர்டு குழும பள்ளிகளைச் சேர்ந்த 235 பேர் ஒரே நேரத்தில் ரூபிக்ஸ் கனசதுரத்தை 2 நிமிடத்துக்குள் மிகச்சரியாக நிறவரிசைப்படி பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.இதில் பங்குகொண்ட மாணவர்கள் 1 நிமிடம் 58 விநாடிகளில் ரூபிக்ஸ் கனசதுரத்தை சரியாகப் பொருத்தினர்.மேலும் கேஆர்எம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 8 வயது மாணவன் சி.எஸ்.ஆஷிக் மாதவ், ரூபிக்ஸ் கனசதுரத்தை 60 நிமிடத்தில் 65 முறை சரியான நிறவரிசைப்படி பொருத்தி மற்றொரு சாதனை படைத்தார்.இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரி கோமல் சிங் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது.


இந்தியா

1.நாகாலாந்தில் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஷுரோஷெலி லெய்சீட்சு நேற்று பதவியேற்றுக்கொண்டார்.ஆளுநர் பி.பி.ஆச்சார்யா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முன்னதாக முதல்வர் ஜெலியாங் ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக ஷுரோஷெலி லெய்சீட்சு பதவியேற்றுக்கொண்டார்.
2.காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாய தலைவராக நீதிபதி அப‌ய் மனோகர் சப்ரேவை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மத்திய அரசு நியமித்துள்ளது.
3.நாடு முழுவதும் கூடுதலாக 50 சோலார் பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.


உலகம்

1.ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.2019-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


இன்றைய தினம்

1.ருடொல்ஃப் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்ற நாள் 23 பிப்ரவரி 1893.
2.10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்ட நாள் 23 பிப்ரவரி 1904.
3.ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 1905.
4.புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 1941.
5.அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 1947.
6.இன்று கயானா நாட்டில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு