Current-Affair-Logo

தமிழகம்

1.தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.இதற்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி,தஞ்சாவூர் தொகுதியில் எம்.ரங்கசாமி,திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் என மூன்று தொகுதிகளிலும் அதிமுக அணியே வெற்றி பெற்றுள்ளது.
2.பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார்.
3.புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.இன்று முதல்வர் வி.நாராயணசாமிக்கு எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தியா

1.கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கியது.இதில் ‘நூற்றாண்டின் சாதனையாளர்’ என்ற உயரிய விருது  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டது.இந்த விருதினை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.
2.உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய பிரதேச ஆளுநருமான ராம் நரேஷ் யாதவ் (90) நேற்று இயற்கை எய்தினார்.
3.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் குரூப் – சி ஊழியர்களுக்கு நவம்பர் மாதச் சம்பளத்திலிருந்து முன் பணமாக ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
4.திருமலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் “ஸ்வைப்’ வசதியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
5. 2016ம் ஆண்டுக்கான சுமித்ரா சரட் ராம் வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் பண்டிட் ஹரி பிரசாத் சௌராஷியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகம்

1.ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஏஞ்சலா மெர்கெல் (62) தெரிவித்துள்ளார்.
2.சீனாவில் விற்பனை செய்யப்பட்ட ஐ-போன் 6எஸ் மாடல் பேட்டரிகளில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளதால் அவற்றை இலவசமாக மாற்றித் தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

விளையாட்டு

1.லண்டனில் நடைபெற்ற ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2.நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2007.
2.முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்ட நாள் 23 நவம்பர் 1936.
3.இன்று உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 23 நவம்பர் 1921.
4.இன்று புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 23 நவம்பர் 1926.