தமிழகம்

1.தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து,புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ)  நடப்பு நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.8% லிருந்து 8.65% ஆக குறைத்துள்ளது.
2.கேரளாவில் முதன் முறையாக கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் இருந்து கொச்சிக்கு 180 கி.மீ., தொலைவிற்கு சூரிய மின்சக்தி( சோலார் ) மூலம் இயங்கும் படகுச் சேவை ஜனவரி 12ல் துவங்க உள்ளது.
3.ஒடிசாவின் பாலாசோரில் இருந்து கடந்த 21-ம் தேதி நடத்தப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது.இதுவரை நான்கு முறை நிர்பய் ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று முறை தோல்வியே ஏற்பட்டுள்ளது.
4.வங்கியில் உள்ள பணத்தை இணையவழியில் (நெட் பேங்கிங்) ரூ.1000-க்கு மேல் பரிமாற்றம் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5.ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் வரிசையில் இந்திய தொழில் வளர்ச்சிப் பணிகள்(Indian Enterprise Development Services ) என்ற புதிய பிரிவையும், அதற்கான பதவியிடங்களை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய தேர்வாணையம் நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வு மூலம் இப்புதிய பதவியிடங்கள் நிரப்பப்படும்.
6.முன்பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து ரூ.2000 நோட்டை அளிக்கும் முறையை “ஸ்நாப் டீல்’ இணைய வர்த்தக நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இதற்காக ரூ.1 அளித்து முன்பதிவு செய்துகொண்டால் நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கே வந்து  ரூ.2000 நோட்டை அளிப்பார்கள்.இந்த சேவை தில்லி குர்காவன், பெங்களூரு ஆகிய நகரங்களில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
7.தில்லி மாநில துணை நிலை ஆளுநர்  நஜீப் ஜங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.


உலகம்

1.காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.அமெரிக்கா இரண்டாவது இடத்தையும்,ஜெர்மனி மூன்றவது இடத்தையும் பிடித்துள்ளன.இந்த வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
2.ஐ.நா. சபையில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கூட்டத்தில் கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்தியா புகழஞ்சலி செலுத்தியது.
3.கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. இது சம்மந்தமாக இருநாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆளில்லா நீர்மூழ்கியை 5 நாட் களுக்குப் பிறகு  சீனா கடந்த டிசம்பர் 20-ம் தேதி அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.


விளையாட்டு

1.சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) வழங்கும் 2016ம் ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான சர்வதேச விருது” இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.”சிறந்த ஜாம்பவான்” ( Legends Award ) விருதை ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் கைப்பற்றியுள்ளார்.
2.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த ஆண்டுக்கான (2016) சிறந்த கிரிக்கெட்  வீரராக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை தேர்வு செய்துள்ளது .மேலும் இந்த ஆண்டின் டெஸ்டின் சிறந்த வீரர் விருதையும் அஸ்வின் பெற்றுள்ளார்.ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டிகாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெஸ்டின் ஐ.சி.சி. ஸ்பிரிட் விருதை மிஸ்பா உல்-ஹக் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 1947.
2.முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட நாள் 23 டிசம்பர் 1954.
3.உலகின் மிகப்பெரிய இரும்பினாலான  டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 1958.
4.எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கிய நாள் 23 டிசம்பர் 1986.
5.இன்று 5வது இந்தியப் பிரதமர் சரண் சிங் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 23 டிசம்பர் 1902.

 

– தென்னகம்.காம் செய்தி குழு