தமிழகம்

1.காங்கேயம் இன நாட்டு மாடுகளை மரபு வழியில் மீட்டெடுத்து பாதுகாக்க ரூ.2.5 கோடி செலவில் சத்தியமங்கலத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.ஆசியா – பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 16 நாடுகளின் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ( RECP ) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
2.மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக இருந்த கோபல் பக்லே பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பொறுப்புக்கு ராவீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற டச்சு ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் – 2017 போட்டியின் ,15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் இந்தியாவின் நீல் ஜோஷி மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் இந்தியாவின் அனன்யா டப்கே சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.


இன்றைய தினம்

1.1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு