இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் மற்றும் 30 நனோ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தமுள்ள 30 செயற்கைகோள்களில் 29 செயற்கைகளோள் அமெரிக்கா உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் தயாரானவை. ஒன்று மட்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.இந்த செயற்கைகோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது.
2.பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த் , குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதால் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பொறுப்பை , மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஐந்தாண்டுகளாக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியான சோனாலி தனது குழுவினருடன் ஃபிஜிர்வர்யா என்று அழைக்கப்படும் புதிய தவளை இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
4.ஜூன் 21 யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பில் Celebrating Yoga என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5.சரக்கு மற்றும் சேவை வரி (GST) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் இவரை நியமித்துள்ளது.


உலகம்

1.இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி , அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் உடன் இணைந்து F 16 போர் விமானங்கள் தயாரிப்பு ஆலையை இந்தியாவில் விரைவில் அமைக்க உள்ளது.
2.இந்தியர்களுக்கு ஜூலை 01 முதல் Online Visitor Visa வழங்கப்படும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச விதவைகள் தினம் (International Widow’s Day).
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. சபை விவாதித்து ஜூன் 23 ஐ சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து, ஆதாரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.1894 – பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு