Current-Affairs-Updates

தமிழகம்

1.சென்னை துறைமுகத்தில் உள்ள டி.பி வேர்ல்டு சரக்கு கையாளும் நிலையத்தில் எம்.வி.மெயர்ஸ்க் செனாங் என்ற  சரக்கு கப்பலில் 26 மணி நேரத்தில் 4,562 கன்டெய்னர்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமான நாள் 23 ஜூன் 2010.

இந்தியா

1.இந்திய பதிவாளர் ஜெனெரல் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாட்டிலேயே மிக அதிக அளவாக தெலுங்கானா மாநிலத்தில் 98.7% மக்கள்(ஆண்கள் 98.8% மற்றும் பெண்கள் 98.6%) அசைவ உணவை உண்பவர்களாக உள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளம்,ஆந்திரா,ஒடிஸா,கேரளா மாநிலங்களில் அசைவ உணவை மிக அதிகமாக உண்பவர்களாக உள்ளனர்.தேசிய அளவில் கடந்த 2004ம் ஆண்டில் 75% பேர் அசைவ உணவை உண்பவர்களாக இருந்தனர்.தற்போது 2014ம் ஆண்டில் இந்த அளவு 71% ஆக குறைந்துள்ளது.சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் (74.1% பேர்) முதலிடம் பெற்றுள்ளது.அடுத்த இடங்களில் பஞ்சாப்,ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.பெரும்பாலும் சைவ உணவை அதிகம் விரும்பி சாப்பிடும் குஜராத் மாநிலத்தில் தற்போது அசைவம் உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.தென் மாநிலங்களில் சைவ உணவை அதிகம் உண்பவர்களின் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
2. இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்ட நாள் 23 ஜூன் 1980.

உலகம்

1.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இந்திய கலாசார மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
2.இன்று நிக்கராகுவா,போலந்து நாட்டில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது .

விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே அடுத்த ஒரு ஆண்டுக்கு இருப்பார்.பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தலைமை பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.