Daily-Current-Affairs

தமிழகம்

1.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.இந்த மின்சக்தி உற்பத்தி நிலையம் 4,536 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 83-ஆவது ஆண்டாக கடந்த செப்டம்பர் 20 -ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
3.வெற்றிமாறன் இயக்கிய தமிழ்ப்படமான விசாரணை அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கேதன் மேத்தா தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா

1.உலக பொருளாதார சுதந்திர குறியீட்டில் இந்தியா 159 நாடுகளில் 112வது இடத்தில் உள்ளது.2016 வருடாந்திர அறிக்கை படி, உலக பொருளாதார சுதந்திர குறியீட்டில் முதலிடத்தில் ஹாங்காங் உள்ளது.அதனை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிச்சர்லாந்து, கனடா, ஜோர்ஜியா, அயர்லாந்து, மொரிஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பட்டியல் வரிசையில் உள்ளன. இந்த ஆய்­வ­றிக்­கையை இந்­தி­யாவைச் சேர்ந்த சிவில் சமூக மையம், கன­டாவின் பிரேசர் மையம் இணைந்து வெளியுட்டுள்ளன.
2.முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்கா சிரோஹி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தில்லியில் மின்னணு டிக்கெட் வசதி கொண்ட, நவீன “ஜிபிஎஸ்’(Global positioning system) கருவி பொருத்தப்பட்ட 100 கிளஸ்டர் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன.
4.எல்ஐசி நிறுவனம் தனது வைர விழா ஆண்டையொட்டி பீமா டைமண்ட் என்ற புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.

உலகம்

1.கனடா விஞ்ஞானிகள் மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.கனடாவில் உள்ள பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின்  மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் ஆகிய இருவரும் இந்த சாதனையை  புரிந்துள்ளனர்.கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவுக்காக இந்த தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர்.இந்த தேசியக் கொடியை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலமே காண முடியும்.
2.பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் 23 செப்டம்பர் 1980.

விளையாட்டு

1.இந்தியா-நியூஸிலாந்து இடையே கான்பூரில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இது இந்தியா அணி பங்குபெறும் 500வது டெஸ்ட் போட்டியாகும்.இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.