உலகம்

1.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது.ஐ.நா. வெளியிட உள்ள தபால் தலைகளில் ‘ஓம்’ என்ற எழுத்தும், யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெற உள்ளன.இந்த சிறப்பு தபால் தலை நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய இடங்களில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது.
2.உலகில் நீடித்த அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கு, ‘புதிதாக உருவாகி வரும் இளம் தலைவர்கள்’ என்ற பெயரில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.இந்த ஆண்டு மால்டா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, தஜிகிஸ்தான், பெல்ஜியம், வியட்நாம், பெரு, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அமெரிக்க தேர்ந்தெடுத்துள்ளது.பாகிஸ்தானில் அமைதிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ராஜ்குமார் என்பவர், இளம் தலைவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3.கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப்படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன.காந்தியின் உருவப்படத்துடன், ‘சர்வீஸ்’ என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு தலா 10 ரூபாய் மதிப்புள்ள இந்த 4 தபால் தலைகளையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தபால் தலை சேகரிப்பாளர் ஒருவர், ரூ. 4 கோடியே 15 லட்சம் (5 லட்சம் பவுண்ட்) கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.


விளையாட்டு

1.சண்டிகரில் நடைபெற்ற ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி., சௌரவ் கோத்தாரியை தோற்கடித்து ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார்.
2.சென்னையில் 19வது ஆசிய தனி நபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்  (World Book and Copy right Day).
யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற போது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.
2.இன்று ஆங்கிலமொழி தினம் (English Language Day).
ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.இன்று வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 23 ஏப்ரல் 1616.
4.யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்ட நாள் 23 ஏப்ரல் 1905.
5.எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 1984.

 

– தென்னகம்.காம் செய்தி குழு