Current-Affairs-Updates

இந்தியா

1.நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள ஆய்வில் 10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனா, ஜப்பான், யு.கே, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, கனடா,ஆஸ்திரேலியா,இத்தாலி ஆகிய நாடுகள்  முறையே 1 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
2. “பார்ச்சூன் நெக்ஸ்ட் 500’’ பட்டியலில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.2015 -ம் ஆண்டு இந்தப்பட்டியலில் 328 வது இடத்தில் இருந்த ஐஆர்சிடிசி இந்த ஆண்டு 199-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
3. அசோசேம் மற்றும் தாட் ஆர் பிட்டேரேஜ் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில்  சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்கா முதல் இடத்தையும்,இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும் கைப்பறியுள்ளன.
4.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.அமெரிக்காவாழ் இந்தியர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில், சினிமா நட்சத்திரம் அபிஷேக் பச்சனும்,விக்ரமும்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உலகம்

1.இன்று சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்.

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791 ஆகஸ்டு 22 நள்ளிரவு முதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இருப்பினும் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.தொடர் நாயகன் விருதை அஸ்வின் 6ஆவது முறையாக கைப்பற்றினார்.இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சச்சின்,சேவாக் சாதனையை முறியடித்துள்ளார் .