current2

தமிழகம்

1.சமுதாய-வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்

இந்தியா

1.2018 ஆம் ஆண்டு  டிசம்பருக்குள் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய ரூ.12,000 கோடியை திருப்பி வழங்குவதற்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.
2.சர்வதேச மருத்துவ சங்கத் தலைவராக ஊழல் புகாரில் சிக்கிய கேதான் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.உள்நாட்டில் ஒரு மணி நேரத்துக்குள்பட்ட விமானப் பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கும் “உடான்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி உள்நாட்டுக்குள் சுமார் 476 கி.மீ. முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு (சுமார் ஒரு மணி நேரம்) அதிகபட்சமாக ரூ.2,500 நிர்ணயிக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
4.அக்டோபர் 18-ம் தேதி பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற விழாவில் நெசவுத் தொழில் செய்து வரும் 500 பெண்களுக்கு சக்கர நூல் ராட்டைகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

உலகம்

1.அமெரிக்காவின் என்.பி.சி. டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன்களிலிருந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நூறுக்கும் மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
2.முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் 23 அக்டோபர் 1911.இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து  துருக்கிய ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.
3.இன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்ட நாள்.
இக்கருவியை அக்டோபர் 23, 2001ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 2008 இல் அசையாநினைவகம் (flash) மற்றும் வன்நினைவகம் (hard disk) கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான “ஐபோட் டச்”, தொடு திரை வசதி பெற்றுள்ளது. ஐப்பாடுகளை யு.எஸ்.பி பெருங்கிடங்காகவும் (USB Mass Storage Device) பயன்படுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. ஐ-டியூன்ஸ் (iTunes) மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம். இந்த ஐட்டியூன்ஸ் மென்பொருளை ஆப்பிள் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
4.இன்று மோல் நாள் (Mole Day).
மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.
1980களில் த சயன்சு டீச்சர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் முதற்தடவையாக மோல் நாள் பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட மோரிசு ஓலெர் என்ற விஸ்கொன்சின் மாநில வேதியியல் ஆசிரியர் 1991 மே 15 ஆம் நாள் தேசிய மோல் நாள் நிறுவனத்தை (National Mole Day Foundation NMDF) ஆரம்பித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் வேதியியல் அல்லது மோல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்நாளில் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பல பாடசாலைகள் இக்காலப்பகுதியை மோல் வாரமாகவும் கொண்டாடுகின்றன. அமெரிக்க வேதியியல் குமுகம் தேசிய வேதியியல் வாரமாகக் கொண்டாடுகின்றது.

விளையாட்டு

1.அகமதாபாத்தில் நடைபெற்ற  உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.இதுவரை நடந்த 8 கபடி உலக கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையை வென்றுள்ளது.
2.தில்லியில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை கீதா போகத், ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

28.இன்று பெரம்பலூர் மாவட்டம்.

பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது. பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு.
இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்க்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
இம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், Shale, கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. செங்கல் மாவட்டத்தின், குன்னம் மற்றும் வேப்பன்தட்டை வட்டம் போன்ற பகுதிகளில் அதிகம் தயாரிக்கப்படுகிறது.