இந்தியா

1.யமுனை நதிக்கரையில் கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்தாலோ, நதிக்கரையில் மலம் கழித்தாலோ ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை ஓட்டிச் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.5,000 அபராதம் வசூலிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.இந்திய கடற்படை மற்றும் Space Aplication Centre இடையே, வானிலை மற்றும் பெருங்கடல் துறையில் தரவுகளை பகிர்தல் மற்றும் அறிவியல் ஒத்துழைப்பு (Data Sharing and Scientific cooperation in the field of Meteorology and Oceanology) பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
4.இந்திய மாநிலங்களில் சிறப்பான அரசாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை பொது விவகாரங்கள் குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது.தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகா அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளன.
5.நர்மதை நதியை பாதுகாக்க, நர்மதா சேவா மிஷன் என்னும் திட்டத்தை பிரதமர் மோடி,  மத்திய பிரதேசத்தின் அமர்கண்டக்கில் துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிக்கு, நாசா அமைப்பு , அப்துல் கலாம் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக Solibacillus Kalamii என அதற்கு பெயரிட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக கோத் தினம் (World Goth Day).
உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009-ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினர். ஒவ்வொரு வருடமும் மே 22 இல் இந்த நிகழ்வை நடத்துவது என முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
2.உலக பல்லுயிர் பெருக்க தினம் (World Biodiversity Day).
மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
3.இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் நடைபெற்ற நாள் 23 மே 1834.
4.ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்ற நாள் 22 மே 1906.
5.விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்ட நாள் 22 மே 1990.

 

– தென்னகம்.காம் செய்தி குழு