இந்தியா

1.மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள உதவும்  ABC of Breast Health App என்ற அலைபேசி செயலியை 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார்.
2.கிராமப்புற வாடிக்கையாளர்களின் வசதிக்காக ICICI வங்கி Mera i Mobile App என்ற அலைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
3.இந்திய தொலைத்தொடர்பு துறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனமும் ஒன்றாக இணைந்துள்ளன.இதன் புதிய தலைவராக குமாரமங்கலம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.சர்வதேச கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சி சங்கத்தின் (Cervical, Spine Research Society) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராஜசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த சங்கத்துக்கு இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
2.உலக அளவில் மிக பிரபலமான திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப் போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றது.இதில் 27 பேரை வென்று 24 வயதாகும் தாய்லாந்தின் ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவா என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.இவர் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.


விளையாட்டு

1.அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில்  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சக நாட்டு வீரரான வாவ்ரிங்காவை தோற்கடித்து 5வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.இதற்கு முன் செர்பியாவின் ஜோகோவிக்கும் 5 முறை பட்டம் வென்றுள்ளார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா சக நாட்டு வீராங்கனை சுவெட்லனா குஸ்நட்சோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக தண்ணீர் தினம் (World Water Day).
தண்ணீர்தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்றும் ஏதுமில்லை. தண்ணீர் வற்றாத செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
2.முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்த நாள் 22 மார்ச் 1895.
3.அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்ட நாள் 22 மார்ச் 1945.
4.ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்ற நாள் 22 மார்ச் 1960.
5.இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்த நாள் 22 மார்ச் 1993.

 

– தென்னகம்.காம் செய்தி குழு