இந்தியா

1.தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.


வர்த்தகம்

1.டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நேற்று பதவியேற்றார்.


உலகம்

1.இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா” விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே மாதம் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
2.வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3.ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலமானார்.
4.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ராணுவ துணை தளபதி ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2.பெண்கள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதிபோட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்தியா மகளிர் அணி வீராங்கனை  தீப்தி ஷர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார்.


இன்றைய தினம்

1.இன்று மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபாய் இறந்த தினம்.இவர் இறந்த தேதி 22 பிப்ரவரி 1944.
2.இன்று அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 22 பிப்ரவரி 1732.
3.ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்ற நாள் 22 பிப்ரவரி 1819.
4.வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 1853.
5.ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவான நாள் 22 பிப்ரவரி 1900.

 

– தென்னகம்.காம் செய்தி குழு