current-affairs

தமிழகம்

1.இந்த வருடத்திற்கான பாரதியார் விருதுக்கு பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வானவில் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 11-ம் தேதி  அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
2.தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்களில் பொது மக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
3.தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா

1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 10.10 மணியளவில் 700 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய  ‘அக்னி-I’ ஏவுகணையை இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
2.வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3.உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட 4 வகையான சோனார் கருவிகள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த சோனார் கருவிகள் கடலுக்கு அடியில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்திய கடற்படையிடம் இந்த சோனார் கருவிகளை ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் முறைப்படி ஒப்படைத்தார்.
4.சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டாக்டர் நாகேந்திர சிங். அவரது நினைவாக உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு ‛சர்வதேச அமைதி விருது’  வழங்கப்படுகிறது.ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதுகளை வழங்கினார்.
5.கேரள மாநிலம் பத்தினம்பட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் தற்போது சபரி மலை ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் கோவிலின் பெயரை சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
6.தாங்கள் வைத்துள்ள கருப்புப் பணத்தை மற்றவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் பினாமி பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

உலகம்

1.சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள் ஒரு மாத பயணத்துக்குப் பின் கடந்த 18-ம் தேதி பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளார்கள்.
2.28-வது ஆசிய – பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையேயான இரண்டு நாள் மாநாடு பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
3.அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் நடத்திய ஆய்வில்  உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எப். கென்னடி  இறந்த தினம்.இவர் இறந்த தேதி 22 நவம்பர் 1963.
2.இன்று லெபனான் விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 22 நவம்பர் 1943.1943-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
3.இன்று கோஸ்ட்டா ரிக்காவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.