தமிழகம்

1.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டைகளின் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் இதற்காக ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் எனவும் அறிவித்துள்ளது.
2.“டிஜிட்டல் இந்தியா” திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநகராட்சிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது.அவ்வாறு இந்த ஆண்டு மதுரை மாநகராட்சிக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது மற்றும் தனியார் அமைப்பு சார்பிலான விருதுகள் உள்ளிட்ட 6 தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன.
3.13 மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 20 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை சாந்திக்கு அரசுப் பணி நியமன உத்தரவை பள்ளிக் கல்வி -விளையாட்டு -இளைஞர் நலத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.
5.2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது சுதந்திரப் போராட்ட வீரரும், பழம் பெரும் படைப்பாளியுமான தி.க.சிவசங்கரன் அவர்களின் புதல்வரான வண்ணதாசனுக்கு ‘ஒரு சிறு இசை’ எனும் சிறுகதை நூலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.கிர்கிஸ்தான் அதிபர் அல்மாஸ்பெக் அதம்பயேவ் தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுடன் 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.அப்போது இந்தியா – கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
2.புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.உலகின் மிக உயரமான நினைவிடமாக உருவாகும் சத்ரபதி சிவாஜி நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24-ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார்.மும்பையின் அரேபியக் கடலில் மாமன்னன் சத்ரபதி சிவாஜி நினைவிடத்தை 3600 கோடி ரூபாய் செலவில் மகாராஷ்டிரா அரசு அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.பாகிஸ்தானில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.5000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3.உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.2 மற்றும் 3-வது இடங்களில் சீனா, ஜப்பான் நாடுகளும் 4 மற்றும் 5-வது இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும்,6-வது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன.இந்தியா,பிரிட்டனை வீழ்த்தி ஆறாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.துபாயில் நடைபெற்ற உலகின் முண்ணனி வீரர்கள் மட்டும் கலந்து கொண்ட உலக சூப்பர் சீரிஷ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் Viktor Axelsen,மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன தைபேயின் Tai Tzu-ying ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
2.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு (பிஎஃப்ஐ) சர்வதேச குத்துச்சண்டை சங்கமான ஏஐபிஏ முழு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியுள்ளது.
3.அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக மூன்றாவது முறையாக பிரஃபூல் படேல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று தேசியக் கணித நாள் (National Mathematics Day).
கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த நாள் டிசம்பர் 22. அந்நாள் இந்தியாவில் தேசியக் கணித
நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
2.வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட நாள் 22 டிசம்பர் 1807.
3.இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்ட நாள் 22 டிசம்பர் 1851.
4.லிங்கன் சுரங்கம் நியூயார்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்ட நாள் 22 டிசம்பர் 1937.
5.இன்று இந்தோனேசியாவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
6.இன்று இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 22 டிசம்பர் 1887.

 

– தென்னகம்.காம் செய்தி குழு