தமிழகம்

1.தேசிய வாழை திருவிழா ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை மதுரை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது.


இந்தியா

1.பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு எடை கட்டுப்பாடு விதித்து தெலுங்கானா மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.01ம் வகுப்பு முதல் 02ம் வகுப்பு வரை – 1.5 கிலோ வரையும்,03ம் வகுப்பு முதல் 05ம் வகுப்பு வரை- 3 கிலோ வரையும்,06ம் வகுப்பு முதல் 07ம் வகுப்பு வரை – 4 கிலோ வரையும்,08ம் வகுப்பு முதல் 09ம் வகுப்பு வரை – 5 கிலோ வரையும்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5.5 கிலோ வரையில் மட்டுமே புத்தக சுமை இருக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
2.நாகலாந்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி பெற்றுள்ளார்.


உலகம்

1.அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டது.இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய் ஆகும்.
2.இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான 22 வயதான அர்பன் ஜோஷி, அந்நாட்டின் இளம்வயது மருத்துவராகி சாதனை புரிந்துள்ளார்.தற்போது அவருக்கு வயது 21 ஆண்டு 335 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளது.


விளையாட்டு

1.சென்னையில் நடைபெற்ற முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர் போட்டியில், கர்நாடகாவின் மனுதேவ் , அலோக் குமாரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு